இலங்கை ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு, சீன ஜனாதிபதி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி- ஜி ஜின்பிங், தமது வாழ்த்துச் செய்தியில், சீனாவும் இலங்கையும், உலகில் பெரும் சவால்களை எதிர்கொண்டு நெருக்கமாக பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார். சீனா – இலங்கை உறவுகளின் வளர்ச்சிக்கு தாம் மிகுந்த முக்கியத்துவம் வழங்குவதாகவும், பலனளிக்கும் செயல் திட்டங்களுக்கும், இரண்டு நாட்டு மக்களுக்கு அதிக நன்மைகளைத் தருவதற்கும் தொடர்ந்து, கோட்டாபயவுடன் பணியாற்ற விரும்புவதாக சீன ஜனாதிபதி கூறியுள்ளார்.